இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திருக்குறள் படிப்போம்

திருக்குறள் படித்தால் மனதில் தெளிவு பிறந்திடும் குணத்தில்

News image
Updated On :7 ஜூன் 2026, 12:00 am IST

திருக்குறள் படித்தால் மனதில்

தெளிவு பிறந்திடும் குணத்தில்

கற்பதைத் தெளிவுற கற்கணும்

கற்றதன்படி நாம நிற்கணும்!

-

தினம் ஒரு திருக்குறள் படித்திடு

திருத்தமாய் உச்சரிப்பு ஒலித்திடு

பொருளைத் தெளிவாய் ஏற்றிடு

பொலிவான முகத்தைப் பெற்றிடு!

-

அறியலாம் ஆயிரம் சிந்தனை

அலசியே தெளியலாம் அத்தனை

தெளிவான அறிவு வந்திடும்

திருக்குறள் பொலிவைத் தடுக்கும்!

-

உலகம் நமதென உணர்த்திடும்

உயர்ந்த நன்னெறி உயர்த்திடும்

ஒற்றுமை உணர்வு செலுத்திடும்

ஒழுக்கம் நெஞ்சில் புகுத்திடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.