கண்டது
(புதுச்சேரியில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'பத்துகண்ணு'
-பி.இளந்திரையன், சென்னை-125.
(சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் எழுதியிருந்தது)
'ஆயில் குறைத்தால் ஆயுள் கூடும்.'
-ஆ.கண்ணதாசன், சென்னை-87.
(தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட மேல்மங்கலம் கீழத் தெருவில் உள்ள வீடொன்றின் பெயர்)
'ராணுவ இல்லம்'
-சி.செல்லமுத்து, பெரியகுளம்.
(மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'பாட்டம்.'
-எம்.எஸ்.பவதாரிணி முரளி, சேலம்.
கேட்டது
(திருச்சி பேருந்து நிலையம் அருகே பெண் பயணியும், யாசகம் பெறுவோரும்)
'ஏம்பா... முழுசா நூறு ரூபாய் போட்டும் முகம் சுளிக்கிறே?'
'ஸ்பெஷல் சாப்பாடு நூற்று எண்பது ரூபாய் ஆச்சே, தாயி!'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
(தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் பேருந்து ஒன்றில் இருவர் பேசியது)
'நண்பா... ரோடு ரோலருக்கு லோன் கொடுப்பாங்களா?'
'எதுக்கு... அதை வெச்சிட்டு என்ன பண்ணுவே?'
'வாழ்க்கையை உருட்டத்தான்.'
-பொன்.சொர்ணவேல், செங்கோட்டை.
(சென்னை பல்லாவரம் தனியார் நிறுவன வாசலில் இருவர் பேசியது)
'இன்னைக்கு நடந்த மீட்டிங்கில் நான் என்ன உளறிட்டேனா?'
'அதெல்லாம் புதுசா ஒண்ணுமில்ல... நீங்க வழக்கமாகப் பேசறதுதானே!'
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
யோசிக்கிறாங்கப்பா!
பேசுவதைவிட இரு மடங்கு கேட்பதற்காகவே நமக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் உள்ளன.
-க.அருச்சுனன், செங்கல்பட்டு.
மைக்ரோ கதை
நான் என் வீட்டு வாசலில் காரை நிறுத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டு, மீண்டும் காருக்கு வந்தேன். அப்போது கார் கண்ணாடி கழற்றப்பட்டிருந்தது.
திடுக்கிட்ட நான் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, எதிர்வீட்டு பால்கனியை நோக்கினேன். அங்கே இருந்த மூன்று குரங்குகளில் ஒன்றின் கையில் கார் கண்ணாடி ஆடியது.
நானும் என்னால் முடிந்தவரையில் கெஞ்சிப் பார்த்தும், குரங்குகள் அதை வீசி எறியவில்லை.
உடனே வீட்டுக்குள் சென்று மொந்தன் வாழைப்பழம் எடுத்து வந்தவுடன் குரங்குகள் மகிழ்ந்தன. அதைப் பல துண்டுகளாக்கி, குரங்குகளை நோக்கி வீசினேன்.
மகிழ்ச்சியில் தாவிக் குதித்து வாழைப்பழத் துண்டுகளைச் சேகரித்தன. கார் கண்ணாடியும் கீழே விழுந்தது.
நானும் மகிழ்ச்சியில் அதை எடுக்கச் சென்றபோது, கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கி இருந்தது.
'கைக்கு எட்டியும் உபயோகமில்லாமல் போச்சே?' என்று வேதனை அடைந்தேன்.
-சிவன், தோப்புத்துறை.
எஸ்.எம்.எஸ்.
பழி வாங்கும் எண்ணத்தை வளர்க்காதே...
அது உன்னைப் பயனற்றவனாக்கும்!
-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
அப்படீங்களா!
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இளைஞர்களை ரீல்ஸ்கள் பெரிதும் கவர்ந்து வருகின்றன. பொழுதுபோக்குக்காகப் பார்க்கப்படும் இந்த சிறு விடியோக்களில் நமக்குத் தேவைப்படும் ரீல்ஸ்கள் நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைக்கும். அவற்றை துறை வாரியாக சேமித்து வைக்கும் சேவை இதுவரையில் இல்லை.
இதனால் ஒவ்வொரு முறையும் தேவையான சில தகவல்கள் அடங்கிய ரீல்ஸ்களைத் தேடிக் கண்டுபிடிக்க நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண புரோபைலில் சேமித்து வைக்கும் புதிய சேவையை மெட்டா நிறுவனம் தொடங்க உள்ளது. இதில் சிறு விடியோக்களை உருவாக்குபவர்கள் தங்களின் பழைய விடியோக்களை ஒரே இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, சமையல் அல்லது உடற்பயிற்சி ரீல்ஸ்களை வெளியிடுபவர்கள் 30 நாள்கள் தொடர்ந்து விடியோக்களை வெளியிட்டிருந்தால் அவற்றை ஒரே சீரிஸாக வைத்து எபிஸோடாக வெளியிடலாம். இதன் மூலம் அந்த விடியோக்களை பாதியிலேயே தவறவிட்ட பார்வையாளர்கள் மீண்டும் அதை எளிதில் கண்டுபிடித்து பார்வையிட உதவும். இந்தச் சேவையில் புதிய ரீல்களையும், பழைய விடியோக்களையும் தேர்வு செய்து அது தொடர்பான முழு விடியோக்களையும் பார்வையிடலாம்.
-அ.சர்ப்ராஸ்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடிஷன் விடியோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்த நடிகை காவ்யா அறிவுமணி!
பள்ளி மாணவா்களுக்கு ஆபாச விடியோக்கள் அனுப்பிய ஆசிரியா் கைது
பேல் பூரி - 7-06-2026

கோயம்பேட்டில் மதுபான விடுதியில் தகராறு - இலங்கைத் தமிழ்ப் பெண் கார் ஏற்றிக் கொலை!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



