ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

தமிழில் வேட்டை

குழந்தைகளுக்குப் போடுவது மொட்டை வயதானால் வருவது சொட்டை

News image
Updated On :24 மே 2026, 12:00 am IST

குழந்தைகளுக்குப் போடுவது மொட்டை

வயதானால் வருவது சொட்டை

பல் விழுந்தால் வருவது ஓட்டை

பிள்ளைகள் செய்வதோ சேட்டை

அப்போது எடுக்க வேண்டும் சாட்டை

மன்னர்கள் ஆண்டது நாட்டை

அவர்கள் நடந்தது ராஜபாட்டை

காந்தி தாத்தா நூற்றதோ ராட்டை

எரிவாயுத் தட்டுப்பாட்டால் மீண்டும் விறகுக் கட்டை

பிரியாணிக்குப் போடுவதோ பட்டை

சத்துணவில் ஒன்று முட்டை

ஆண்கள் அணிவதோ சட்டை

உறக்கத்தில் விடுவதோ குறட்டை

மது குடிப்பது கெடுக்கும் வீட்டை

மாம்பழத்தில் இருப்பதோ கொட்டை

பிள்ளையாருக்குப் படைப்பது கொழுக்கட்டை

தண்ணீர் தேங்கினால் அது குட்டை

பந்தை அடிப்பதோ மட்டை

தமிழ்நாட்டை ஆள்வது புனித ஜார்ஜ் கோட்டை

தில்லியில் இருப்பது செங்கோட்டை

திருச்சியில் இருப்பது மலைக்கோட்டை

என் மாவட்டம் புதுக்கோட்டை!

சாலை மாதங்கி, புதுக்கோட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.