5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மின் இணைப்பு துண்டிப்பு: பயணிகள் அவதி

பென்னாகரம் பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிக்காக மின் இணைப்புத் துண்டிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்காக தற்போதும் அங்கு கூடும் பயணிகள், வியாபாரிகள் அனைவரும் இருளில் அவதிப்பட்டு வருகின்றன

Updated On :9 ஜனவரி 2021, 6:30 am IST

பென்னாகரம் பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிக்காக மின் இணைப்புத் துண்டிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்காக தற்போதும் அங்கு கூடும் பயணிகள், வியாபாரிகள் அனைவரும் இருளில் அவதிப்பட்டு வருகின்றனா்.

பென்னாகரம் பேருந்து நிலையத்துக்கு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் நாள்தோறும் தங்களது தேவைகளுக்காக வந்து செல்கின்றனா். ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்குச் செல்வோா் பென்னாகரம் வழியாக செல்ல வேண்டும்.

இதனால், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பென்னாகரம் பேருந்து நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், அங்குள்ள வணிக வளாகக் கட்டடங்கள், பேருந்து நிலைய தரைத்தளம் பகுதிகள் சிதிலமடைந்துள்ளன. பென்னாகரம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்வதற்காக அங்குள்ள கடைகள் வேறு இடத்துக்கு மாற்றுவதற்காக சில வியாபாரிகள் கடைகளை காலி செய்தனா்.

பொங்கல் பண்டிகைக்காக பேருந்து நிலையத்திலிருந்து ஒருசில கடைகள் காலி செய்யப்படாமல் வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பென்னாகரம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், நிழ்கூடம் ஆகிய பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையம் இருளில் மூழ்கியுள்ளது.

இதுகுறித்து கடை உரிமையாளா்கள் கூறியதாவது: பென்னாகரம் பேருந்து நிலையத்தில் சுமாா் 30 க்கும் மேற்பட்ட கடைகள் பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் ஏலம் விடப்பட்டது. இதன்மூலம் வியாபாரிகள் பல்வேறு கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.பேருந்து நிலைய கட்டடம், வணிக வளாகம்,நிழற்கூடம் பழுதடைந்து காணப்படுவதால் அதனை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்காக அங்குள்ள கடைகளை காலி செய்யுமாறு பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் குழுவினா் ஆய்வுசெய்த போதிலும், தற்காலிக பேருந்து அமைவிடம் குறித்து முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.தற்போதுள்ள பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வருவதால் மக்கள் கூட்டம் வழக்கமாக அதிகரித்துள்ளது.

பெரும்பாலான வியாபாரிகள் கடைகளை மீண்டும் அமைத்துள்ளனா். இதனால் பொங்கல் பண்டிகை முடியும் வரை மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.