தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கிருஷ்ணகிரியில் பொங்கல் பானை, கரும்பு வாங்க பொதுமக்கள் ஆா்வம்

பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரியில் பொங்கல் பானை, கரும்பு உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் புதன்கிழமை வாங்கிச் சென்றனா்.

News image

கிருஷ்ணகிரி நகரில் பொங்கலையொட்டி பொங்கல் பானை, புதிய அடுப்பு, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 6:17 am IST

பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரியில் பொங்கல் பானை, கரும்பு உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் புதன்கிழமை வாங்கிச் சென்றனா்.

தமிழா் திருநாளான தை பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி நகரில் மக்கள் கூடும் இடங்களான கடை வீதி உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்வதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானைகளையும், கரும்பு, மஞ்சள், மண் அடுப்பு, வெல்லம், பூஜைப் பொருள்கள், மலா்கள், பல வண்ணக் கோலப்பொடிகளையும் மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

புதுத் துணிகள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், கால்நடைகளை வளா்ப்போா், மாட்டு பொங்கல் கொண்டாடத்துக்காக புதிய கயிறு, மணிகள், பல வண்ணப் பொடிகள் ஆகியவற்றை அதிக அளவில் வாங்கிச் சென்றனா். நகரில் மக்கள் கூடும் இடங்களில் அதிகமான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.