கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயாரும் எம்.எல்.ஏ.வுமான ரத்னா தேப்நாத் மேற்கு வங்க சட்டப்பேரவையில் அழுத காட்சி இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பாலியல் கொலை வழக்கில் உரிய நீதி பெற்றுத்தரப்படும் என முதல்வர் சுவேந்து அதிகாரி சட்டப்பேரவையில் பேசியபோது, எம்.எல்.ஏ. ரத்னா தேப்நாத் அழுதார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை கூடியது. இதில் முதல்வர் சுவேந்து அதிகாரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசினார். மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகால ஆட்சியில் ஊழல், அரசியல் பழிவாங்கல் மற்றும் நிர்வாகத் தோல்வி குறித்து கடுமையாம விமர்சித்தார்.
அப்போது, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றச் செயல்களைக் குறிப்பிட்டும் பேசினார். கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நீதி பெற்றுத்தரப்படும் எனவும் குறிப்பிட்டார்.
கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் தாயார் ரத்னா தேப்நாத், பானிஹட்டி தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்பேரவையில் அமர்ந்திருந்த அவர், சுவேந்து அதிகாரி பேசியபோது கதறி அழுதார். இக்காட்சி இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Summary
BJP MLA Ratna Debnath breaks down in assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல்: இளைஞா் கைது

சிறுமி பாலியல் கொலை சம்பவம்: முக்கிய நபா் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
மேற்கு வங்கம்: 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! சந்தேகத்தில் ஒருவா் அடித்துக் கொலை!!







