எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலி்ல் திருப்பாவை சொற்பொழிவு தொடக்கம்

காரைக்கால், டிச. 17 : மார்கழி மாத தொடக்கத்தையொட்டி ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் திருப்பாவை தொடர் சொற்பொழிவு மற்றும் பஜனை வீதிவலம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. மார்கழி மாதம் சிவ மற்றும் வைணவத் தி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:13 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், டிச. 17 : மார்கழி மாத தொடக்கத்தையொட்டி ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் திருப்பாவை தொடர் சொற்பொழிவு மற்றும் பஜனை வீதிவலம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

மார்கழி மாதம் சிவ மற்றும் வைணவத் திருத்தலங்களில் முறையே திருவெம்பாவை, திருப்பாவை சொற்பொழிவு, பஜனை வீதிவலம் செல்லுதல் வழக்கம். திருமலை திருப்பதி தேவஸ்தான ஆதரவுடன் காரைக்காலில் புகழ்பெற்ற ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மார்கழி பூஜை சனிக்கிழமை காலை 5 மணி்க்கு தொடங்கியது.

சயன நிலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ரங்கநாதர், உத்சவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் உள்ளிட்ட மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து பஜனை வீதிவலம் செல்லுதல் தொடங்கியது. கோயிலில் மூலவரையும், உத்சவரையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிபபாளர் ஸ்ரீகாந்த், கோயில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கோயிலில் உ.வே.அரங்கநாதாச்சாரியார் தலைமையில் திருப்பாவை தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. தினமும் இந்த சொற்பொழிவு நடத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது. மார்கழி மாத பூஜை ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் கோயில் பக்தஜன சபாவும் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.