மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கோவை அருகே காணாமல் போன குழந்தைகள் 5 பேர் மீட்பு

பெரியநாயக்கன்பாளையம், டிச.17: கோவை அருகே பெரியநாயக்கன் பாளையத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன குழந்தைகள் 5 பேர் இன்று காலை மேட்டுப்பாளையம் அருகே மீட்கப்பட்டனர்.  கோவை மாவட்டம் ஒண்டிபுதூர்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:12 pm

விஜயக்குமார்

பெரியநாயக்கன்பாளையம், டிச.17: கோவை அருகே பெரியநாயக்கன் பாளையத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன குழந்தைகள் 5 பேர் இன்று காலை மேட்டுப்பாளையம் அருகே மீட்கப்பட்டனர்.

 கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது குழந்தைகள் மாசிலாமணி, சக்திவேல், கருப்பசாமி. கூ.கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி குழந்தைகள் சரண்யா, சந்தியா. காளிமுத்துவின் குழந்தைகளை, குழந்தைகளின் தாய்மாமன் இசக்கி முத்து என்பவர் வளர்த்து வந்தார். இசக்கி முத்து பல்வேறு இடங்களுக்கு சென்று ஈயம் பூசும் பணியில் ஈடுபட்டு வந்தார். இசக்கி முத்து பெரியநாயக்கன்பாளையம் வந்து தனது வேலையை செய்து வந்தார். அவருடன் 3 குழந்தைகளையும் அழைத்து வந்தார். இந்த 3 பேருடன் சக்கரபாணியின் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் 8 மணிக்கு மேல் 5 குழந்தைகளும் காணாமல் போயினர். இசக்கி முத்து இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் இந்தப் புகாரின் அடிப்படையில் குழந்தைகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தின் குழந்தைகள் 5 பேரையும் மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.