எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருநள்ளாறு கோயிலில் மத்திய ரயில்வே அமைச்சர் கே.எச்.முனியப்பா தரிசனம்

காரைக்கால், டிச. 17 : திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா சனிக்கிழமை தரிதனம் செய்தார். காரைக்கால் முதல் சென்னைக்கு புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில்பாத

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:13 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், டிச. 17 : திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா சனிக்கிழமை தரிதனம் செய்தார்.

காரைக்கால் முதல் சென்னைக்கு புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில்பாதையில் ரயில் போக்குவரத்தை இயக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, மத்திய ரயில்வே இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா சனிக்கிழமை காலை காரைக்கால் வந்தார்.

காரைக்காலில் இருந்து திருநள்ளாற்றில் உள்ள ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு அமைச்சர் சென்றார். அவரை கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே.பன்னீர்செல்வம் வரவேற்று சன்னதிகளுக்கு தரிசனம் செய்ய அழைத்துச் சென்றார். ஸ்ரீ சொர்ணகணபதி, ஸ்ரீ சுப்ரமணியர் மற்றும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், அருள்மிகு பிரணாம்பிகை சன்னதிகளில் அமைச்சர் வழிபாடு செய்தார்.

தனி சன்னதிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ சனீஸ்ரபகவானை அமைச்சர் வழிபாடு செய்தார். சன்னதியில் எள்தீபம் ஏற்றியும், சனீஸ்வரனுக்கு கறுப்பு வஸ்திரம் அணிவித்து மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. தரிசனத்தில் கலந்துகொண்ட அமைச்சருக்கு சிவாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.