தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

போபர்ஸ் ஊழல் குறித்து சோனியா விளக்கம் அளிக்க வேண்டும்: பாஜக

குவாஹட்டி, ஜன.9: லஞ்சம் மற்றும் ஊழல் விவகாரத்தை பொதுமக்களிடமும், நீதித்துறையிடமும் கொண்டுசெல்ல பாஜக தேசிய செயற்குழு முடிவுசெய்துள்ளது. போபர்ஸ் ஊழல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விளக்கம் அளி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

குவாஹட்டி, ஜன.9: லஞ்சம் மற்றும் ஊழல் விவகாரத்தை பொதுமக்களிடமும், நீதித்துறையிடமும் கொண்டுசெல்ல பாஜக தேசிய செயற்குழு முடிவுசெய்துள்ளது.

போபர்ஸ் ஊழல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஊழல் புரிந்தவர்களைத் தண்டிக்கவும், வரிசெலுத்துபவர்களின் பணம் அரசுக்கு திரும்பக் கிடைக்கவும் அனைத்து சட்ட அமைப்புகளையும் அணுக தேசிய செயற்குழு முடிவுசெய்திருப்பதாக பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2010-ம் ஆண்டு ஊழல் ஆண்டாக இருந்தது. 2011 அதை மூடிமறைக்கும் ஆண்டாக இருக்கப் போகிறது. போபர்ஸ் விவகாரம் குறித்து நாட்டு மக்களுக்கு சோனியா காந்தி குடும்பம் விளக்கம் அளிக்க வேண்டும் என சீதாராமன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.