மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பழ.கருப்பையா வீட்டில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது

சென்னை, மே 24- அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா வீட்டில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். சென்னை ராயப்பேட்டை காவல் நிலையம் அருகே பழ. கருப்பையா வசித்து வருகிறார். இன்று பகல், மர்ம நபர் ஒருவ

Updated On :20 செப்டம்பர் 2012, 9:16 am IST

சென்னை, மே 24- அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா வீட்டில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ராயப்பேட்டை காவல் நிலையம் அருகே பழ. கருப்பையா வசித்து வருகிறார். இன்று பகல், மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியின் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினார்.

இந்நிலையில், அந்த நபர் அவசரத்தில் தனது செல்போன் மற்றும் ஹெல்மட்டை பழ.கருப்பையா வீட்டில் தவறவிட்டுச் சென்றார். இதையடுத்து, திரும்பி வந்த அந்த நபர் பழ.கருப்பையாவின் மனைவியிடம் சங்கிலியை தந்துவிடுவதாகவும், தனது போனையும் ஹெல்மட்டையும் தன்னிடம் ஒப்படைக்குமாறும் கெஞ்சினார்.

சங்கிலி பறிப்பு குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீஸார் அந்த நபரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.