எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

160 ஆண்டு பழமையான காரைக்கால் நேரு மார்க்கெட் இடிந்தது

காரைக்கால், நவ. 2 : காரைக்காலில் பெய்துவரும் தொடர் மழையால் 160 ஆண்டு பழமையான நேரு மார்க்கெட்டின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை இரவு இடிந்துவிழுந்தது. வியாபாரிகளும், பொதுமக்களும் அப்பகுதியில் இல்லாததால் வி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:12 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், நவ. 2 : காரைக்காலில் பெய்துவரும் தொடர் மழையால் 160 ஆண்டு பழமையான நேரு மார்க்கெட்டின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை இரவு இடிந்துவிழுந்தது. வியாபாரிகளும், பொதுமக்களும் அப்பகுதியில் இல்லாததால் விபரீதம் இல்லாமல்போனது.

காரைக்காலில் உள்ள நேரு மார்க்கெட் 1852ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் நிர்வாகத்தின்போது கட்டப்பட்டது. அப்போது நகரத்தில் இருந்த சில ஆயிரம் மக்களை கருத்தில்கொண்டும், எதிர்கால மக்கள் பெருக்கத்தைக் கருத்தில்கொண்டும் மார்க்கெட் வளாகம் கட்டப்பட்டது. இவ்வளவு ஆண்டுகளாக கட்டடத்தின் பல்வேறு பகுதிகள் அவ்வப்போது ஆங்காங்கே சிதிலமடைந்து உடைந்து விழுந்தவண்ணம் இருந்துவருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்துவரும் தொடர் மழையால் நேரு மார்கெட்டின் ஒரு பகுதியின் கூரை செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென விழுந்தது. அப்போது அந்த இடத்தில் வியாபாரிகளும், பொதுமக்களும் இல்லாததால் பாதிóப்பு எதுவும் இல்லாமல் தப்பித்தது.

புதன்கிழமை காலை நகராட்சி நிர்வகத்தினர் அங்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மார்க்கெட் வளாகத்தில் காய்கறி, மளிகை உள்ளிட்ட பல்பொருள் அங்காடிகள், மீன், இறைச்சி உள்ளிட்ட பிரிவுகளும், உணவகங்களும் என 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைவைத்து வியாபாரம் செய்துவருகின்றனர். இடிபாடு ஏற்பட்டு வந்தாலும், வியாபாரிகள் எவ்வித அச்சமுமின்றி வியாபாரம் செய்துவருகின்றனர். ஆனால் இடிபாடுகள் தொடர்ந்து நடந்துவருவதை அறிந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் மார்க்கெட்டுக்குள் நுழைய அச்சப்படுவதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.