எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மீனவர்கள் மாயமான சம்பவம்: மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

காரைக்கால், நவ. 4 : மீனவர்கள் இருவர் கடலுக்குள் மாயமானது தொடர்பாக அவர்களைத் தேட மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டிக்கும் வகையில், 4வது நாளாக காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்க கடல

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:14 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், நவ. 4 : மீனவர்கள் இருவர் கடலுக்குள் மாயமானது தொடர்பாக அவர்களைத் தேட மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டிக்கும் வகையில், 4வது நாளாக காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் செல்வமணி, பழனிமுருகன் என்கிற இருவர் கடந்த 31ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது, படகிலிருந்து தவறி விழுந்துவிட்டனராம். இவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில், புதுவை மாநில அரசோ, மத்திய மாநில அரசோ மீனவர்களை தேடுவதற்கு உரிய விரைவு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தில் உள்ள சிறிய பைபர் படகுகள் அந்தந்த கிராமத்தின் கடலோரப் பகுதியில் நிறுத்திக்கொண்டு கடலுக்குள் சென்றுவருவது வழக்கம். பாதிப்பு நேர்ந்த இரு கிராமத்தை சேர்ந்த மீனவர்களும் சம்பவம் நடந்த நாள் முதல் கடலுக்குள் செல்லவில்லை. இக்கிராமத்தினருக்கு ஆதரவாக மற்ற கிராம மீனவர்களும் கடந்த 2 நாள்களாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதில்லை என்ற முடிவை எடுத்துள்ளனர்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில், காரைக்கால் மீன்வளத்துறையில் பதிவு செய்துள்ள மரத்தாலான விசைப்படகு 120, இரும்பு படகு 82 உள்ளது. மேலும் காரைக்காலில் பதிவு செய்துவிட்டு தமிழக துறைமுகப் பகுதியில் நிறுத்திக்கொண்டு தொழில் செய்யும் படகுகள் 100க்கும் மேற்பட்டவை உள்ளது.

இந்நிலையில் மீனவர்கள் மாயமானது தொடர்பாக,  அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டிக்கும் வகையில், ஆழ்கடலுக்கு செல்வதில்லை என்று விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்திருக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமையோடு 4வது நாளை எட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.