எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

9 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவு : காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்

காரைக்கால், நவ. 10 : கடந்த 9 நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த காரைக்கால் மாவட்ட மீனவர்கள், புதுச்சேரி முதல்வரின் வாக்குறுதியேற்று வியாழக்கிழமை இன்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். காரைக்கால்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:20 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், நவ. 10 : கடந்த 9 நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த காரைக்கால் மாவட்ட மீனவர்கள், புதுச்சேரி முதல்வரின் வாக்குறுதியேற்று வியாழக்கிழமை இன்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவர்கள் கடந்த மாதம் 31ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது படகிலிருந்து கீழே விழுந்து மாயமானார்கள். இவர்கள் இதுவரை கரை திரும்பாததால், அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தினர்.

புதுச்சேரி அரசின் மீன்வளத்துறை சார்பில் ரூ.1 லட்சம் அளித்த நிவாரணத்தை வாங்க மறுத்து 1ஆம் தேதி முதல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 கிராமங்களின் மீனவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பைபர், விசைப்படகுகள் கடலோரப் பகுதியிலும், துறைமுகத்திலும் நிறுத்திவைக்கப்பட்டன.

மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தார்கள் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியை இருமுறை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். புதன்கிழமை புதுச்சேரியில் நடைபெற்ற சந்திப்பில், முதல்வரின் நிவாரண நிதி மற்றும் துறை சார்பில் நிவாரண உதவி ஆகியவை சேர்த்து தலா இரண்டரை லட்சம் ரூபாய் வழங்குவதாகவும், மீனவர்கள் வலியுறுத்தியுள்ள கோரிக்கைகள் குறித்து படிப்படியாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என முதல்வர் அளித்த உறுதிமொழியேற்று வேலை நிறுத்தப்ப போரட்டத்தை புதன்கிழமை மாலை விலக்கிக்கொண்டனர்.

இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலையிலேயே படகுகளை இயக்கிக்கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். சிறிய படகுகளில் கொண்டுவரப்பட்ட மீன்கள், காலையிலேயே காரைக்கால் மீன் சந்தைக்கு விற்பனைக்கு வந்தன. விசைப்படகுகளை இயக்கிச் சென்றோர், அடுத்த ஓரிரு நாள்கள் கடலுக்குள் மீன்பிடித்துவிட்டு திரும்புவர். போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது காரைக்கால் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.