47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கடத்தப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்

நாகப்பட்டினம், நவ.11: கோடியக்கரையில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து இந்த தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டதாம். கோடியக்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:21 pm

சங்கர்

நாகப்பட்டினம், நவ.11: கோடியக்கரையில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கையிலிருந்து இந்த தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டதாம். கோடியக்கரையில் இருந்து, நாகப்பட்டினம் வழியாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பரவை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த  டாடா சுமோ வாகனத்தை சோதனையிட்டனர். அதில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள 15.6 கிலோ எடையுள்ள 156 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கோடியக்கரையைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் டிரைவர் வேதய்யனை போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.