எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புரட்டாசி சனி: சிறப்பு அலங்காரத்தில் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்

காரைக்கால், அக். 8 : புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி  பலராமர் மீது அமர்ந்து உறியில் இருக்கும் வெண்ணெய் திருடும் காட்சியில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீரங்கத்த

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:47 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், அக். 8 : புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி  பலராமர் மீது அமர்ந்து உறியில் இருக்கும் வெண்ணெய் திருடும் காட்சியில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கத்தில் சயன நிலைகொண்டு அருள்பாலிக்கும் ரங்கநாதரைப்போல் பெரிய திருமேனிகொண்டு சயன நிலையில் காரைக்காலில் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள்.

எல்லா தரப்பினரும் இத்திருத்தலத்துக்கு வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். புரட்டாசி மாதம் முழுவதும் புரட்டாசித் திருவிழா பெயரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் உத்ஸவரான ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. 8ஆம் தேதி சனிக்கிழமை உத்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு தாயார் சந்நிதி பகுதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

முதல் சனிக்கிழமை ஆலிலைக் கண்ணனாகவும், 2வது சனிக்கிழமை ஆநிரைக் கண்ணனாகவும் பல அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். 3வது சனிக்கிழமை, உயரத்தில் உறியில் உள்ள வெண்ணெயை பலராமர் மீது ஏறி திருடும் கண்ணனாக ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை முதல் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து உத்ஸவரையும், மூலவரையும் வழிபட்டனர். முன்னதாக மூலவருக்கும், உத்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் பக்தஜன சபாவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.