ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்: ஜெயலலிதா இன்று பிரசாரம்

திருச்சி:  திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று திருச்சி செல்கிறார். வேனில் சென்று, ஒரே நாளில் 7 இடங்களில் அவர் பேசுகிறார். திருச்சி மேற்கு தொகுதிக்கு இடை

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

திருச்சி:  திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று திருச்சி செல்கிறார். வேனில் சென்று, ஒரே நாளில் 7 இடங்களில் அவர் பேசுகிறார்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எம்.பரஞ்சோதியும், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிடுகிறார்கள். மேலும் இந்திய ஜனநாயக கட்சி, அகில இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, மக்கள் சக்தி ஆகிய கட்சி வேட்பாளர்களுடன், 12 சுயேச்சைகள் உள்பட தேர்தல் களத்தில் மொத்தம் 16 பேர் உள்ளனர்.

தேர்தல் பிரசாரம் 11-ந் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைய இருப்பதால் இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதியை ஆதரித்து திருச்சியில் இன்று பிரசாரம் செய்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து இன்று பிற்பகல் 3.15 மணிக்கு விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது, பிரசாரத்தை முடித்துவிட்டு இன்று இரவு 9 மணியளவில் சென்னை திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.