சிதம்பரம், அக்.16: திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து சிதம்பரத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் கிளம்பத் தாமதம் ஆனது.
வழக்கமாக காலை 6.27க்கு சிதம்பரம் வரவேண்டிய திருச்செந்தூர் -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டு உடனே கிளம்பிவிடும். ஆனால், சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது, இஞ்சினில் முக்கியமான ஆக்சில் ஒன்று துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அதனை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால், கோளாறு சரிசெய்ய இயலாத நிலையில், மாற்று இஞ்சின் கொண்டுவரப்பட்டது. பின்னர் மாற்று இஞ்சின் உதவியுடன் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதாகப் புறப்பட்டுச் சென்றது. வழக்கமாக 11.40க்கு சென்னைக்கு வந்து சேரவேண்டிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், மதியம் 1 மணி அளவில் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வள்ளிமதுரை அணையிலிருந்து அரூருக்கு குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: ஈசன் முருகசாமி

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

