எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் வீட்டினுள் துறைமுக ஊழியர் சாவு

காரைக்கால், ஏப். 6 : காரைக்காலில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தங்கிய துறைமுக ஊழியர் உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:29 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், ஏப். 6 : காரைக்காலில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தங்கிய துறைமுக ஊழியர் உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது : புதுச்சேரி சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் பலராமன் மகன் ஸ்ரீதர் (50). இவர் காரைக்கால் துறைமுகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். காரைக்காலில் உள்ள பாரதி நகர் முதல் குறுக்குத் தெருவில் வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

வியாழக்கிழமை மாலை பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர் வெள்ளிக்கிழமை பணிக்கு புறப்படாதது குறித்து, அவருடன் பணிபுரிவோர் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். உள் பக்கமாக தாழி்ட்ட நிலையில், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதவை திறந்து போலீஸார் சென்று பார்த்தனர். அசைவின்றி கிடந்த அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவருடன் பணியாற்றியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.