சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்எல்ஏ பாலபாரதி உண்ணாவிரதம்

திண்டுக்கல், ஆக., 1 : திண்டுக்கல் மாவட்டம் பிடபுள்இ காலனியில் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தார் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார்

Updated On :26 செப்டம்பர் 2012, 5:32 am

திண்டுக்கல், ஆக., 1 : திண்டுக்கல் மாவட்டம் பிடபுள்இ காலனியில் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தார் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். இந்நிலையில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர், காவல்துறைக்கு சொந்தமான இடம் என்று கூறி சாலை அமைக்க அனுமதி மறுப்பதைத்  தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி திண்டுக்கல் மாவட்ட ஆடசியர் அலுவலகம் முன்பு இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் என். பாண்டி, நகரச் செயலாளர் ஆசாத், ஒன்றியச் செயலாளர் அஜய் கோஷ் உட்பட நூற்றுக்கும்  மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.