ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக., 06 : ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணை கிண்டல் செய்த 2 வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் இன்று அனைத்து வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களைப் புறக்கணித்து சாலை மறியல் மற்றும் டிஎஸ்பியின் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சங்கர் என்பவரது மனைவி ராணி (32)யை கிண்டல் செய்ததாக வந்த புகாரினை அடுத்து 2 வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஸ்ரீவல்லிபுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் அதன் தலைவர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீவல்லிபுத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாள்ர் சக்திவேல் , சார்பு ஆய்வாளர் தேவசங்கரி மற்றும் இரு காவலர்களை பணி நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இரு வழக்கறிஞர்களையும் போலிஸார் தாக்கியுள்ளனர். இது குறித்து மனித உரிமை கமிஷனில் முறையிடுவது என்றும் தனி நபர் வழக்குத் தொடருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இது குறித்து 8ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டக கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெறும் சாமாதானக் கூட்டத்தை புறக்கணிப்புது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீவில்லியுத்தூர் - சிவகாசி சாலையில் மாவட்ட ஒருங்கணைந்த நீதிமன்றத்துக்கு எதிரே வழக்குறைஞர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


