மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக., 06 : ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணை கிண்டல் செய்த 2 வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் இன்று அனைத்து வழக்குரைஞர்களும் நீதிமன்றங்கள

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:39 am

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக., 06 : ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணை கிண்டல் செய்த 2 வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் இன்று அனைத்து வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களைப் புறக்கணித்து சாலை மறியல் மற்றும் டிஎஸ்பியின் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் சங்கர் என்பவரது மனைவி ராணி (32)யை கிண்டல் செய்ததாக வந்த புகாரினை அடுத்து 2 வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து ஸ்ரீவல்லிபுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் அதன் தலைவர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீவல்லிபுத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாள்ர் சக்திவேல் , சார்பு ஆய்வாளர் தேவசங்கரி மற்றும் இரு காவலர்களை பணி நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

இரு வழக்கறிஞர்களையும் போலிஸார் தாக்கியுள்ளனர். இது குறித்து மனித உரிமை கமிஷனில் முறையிடுவது என்றும் தனி நபர் வழக்குத் தொடருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இது குறித்து 8ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்,  மாவட்டக கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெறும் சாமாதானக் கூட்டத்தை புறக்கணிப்புது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீவில்லியுத்தூர்  - சிவகாசி சாலையில் மாவட்ட ஒருங்கணைந்த நீதிமன்றத்துக்கு எதிரே வழக்குறைஞர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.