/

உடைந்துவிழுந்த மின்கம்பத்தில் சிக்கி ஒருவர் பலி: மக்கள் சாலைமறியல்

திருக்கோவிலூர், ஆக.8: திருக்கோவிலூர் அருகே உடைந்து விழுந்த மின் கம்பத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ரிஷிவந்தியம் தொகுதிக்கு

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:41 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர், ஆக.8: திருக்கோவிலூர் அருகே உடைந்து விழுந்த மின் கம்பத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட சாத்தபத்தூர் பகுதிகளில் வயல்களின் மேலாகச் செல்லும் மின் ஒயர்கள் கம்பங்கள் பழுதடைந்து கிடப்பதால் தாழ்நிலையில் தொங்குகின்றன. மேலும் மின் கம்பங்கள் பல உடைந்து, அரிப்பால் சாய்ந்து கிடக்கின்றன. இது  தொடர்பாக கடந்த 6 மாத காலமாக மக்கள் பத்து முறை சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மின் கம்பங்களைச் சரிசெய்யக் கோரி நடந்த போராட்டங்களால் இதுவரை எந்த பலனும் இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் மக்கள். அதிகாரிகள் மெத்தனப் போக்கோடு செயல்படுவதால் விபத்துகள், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பலத்த காற்று இந்தப் பகுதியில் வீசியது. இதில் சில மின் கம்பங்கள் உடைந்து வயல் பகுதிகளில் விழுந்துள்ளன. இப்பகுதியில் தன் வயலுக்குச் சென்ற ஒரு விவசாயி திங்கள் கிழமை அன்று உடைந்து விழுந்த மின்கம்பத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இது இன்று காலைதான் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது. இறந்தவர் உடலை மீட்டு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரான் சாலையில் பாவந்தூர் பஸ்நிறுத்தம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டுள்ள மக்களிடம் தியாகதுருகம் காவல் நிலையத்தில் இருந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. சாலை மறியல் தொடர்ந்து கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.