6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிரானைட் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் ஆக.31க்கு ஒத்திவைப்பு

மதுரை, ஆக.22: மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி 4 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை இன்று எடுத்துக் கொண்ட மதுரை நீதிமன்ற நீதிபதிகள் ஜனா

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:54 am

தர்மராஜ்

மதுரை, ஆக.22: மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி 4 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை இன்று எடுத்துக் கொண்ட மதுரை நீதிமன்ற நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, துரைசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மதுரை

எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் தகவல் கேட்டனர். அதற்கு, அவர், இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரின் பாஸ்போர்ட் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கில் இது வரை, 35 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் பலரைத் தேடி வருகிறோம். முறைகேடு புகாருக்கு உள்ளாகி, சரண் அடைந்துள்ள பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல் தெரிவித்தார்.

பின்னர் சிபிஐ விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்த 4 பேரின் மனுக்கள் பேரிலும், வரும் ஆக.31ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.