ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக., 30 : மதுரையில் இருந்து நெல்லை மாவட்டம் சுரண்டைக்கு காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வேனும், சங்கரன்கோயிலில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ராஜபளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்படி விளக்கு அருகே வேனும், அரசு பேருந்தும் நேரக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வேன் ஓட்டுநர் நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் என்ற இடத்தைச் சேர்ந்த காளைப்பெருமாள் நாடார் மகன் கனகராஜ் (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
வேன் மீது மோதிய வேகத்தில் அரசு பேருந்து நிலைத்தடுமாறி சாலை ஓரம் ஓடியது. இதையறிந்து பேருந்து எங்காவது சென்று மோதி விபத்துக்குள்ளாகும் என்று அறிந்து பேருந்தின் இறுதிச் சீட்டில் அமர்ந்திருந்த விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி தங்கசாமி நாடார் மகன் வேல்ராஜ் (42) பேருந்தில் இருந்து குதித்துள்ளார். இவர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி நின்றது. இதில் வேல்ராஜ் பலியானார்.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 12 பேர் பலத்த காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வன்னியம்பட்டி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


