கிருஷ்ணகிரி ஆட்சியர் கார் விபத்து: காயங்களுடன் உயிர் தப்பினார்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சென்ற கார், அரசுப் பேருந்து உடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், உதவியாளர் முனிராஜ் என்பவர் உயிரிழந்தார்.


கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சென்ற கார், அரசுப் பேருந்து உடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், உதவியாளர் முனிராஜ் என்பவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பூஜா குல்கர்னி இன்று மதியம் கிருஷ்ணகிரி - தருமபுரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற கார் சாலையில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த தபேதார் முனிராஜ் உயிரிழந்தார். மாவட்ட ஆட்சியர் பூஜா குல்கர்னி காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் உடனடியாக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தில், கார் ஓட்டுநர் உள்பட மூவர் காயம் அடைந்தனர். மாநில நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.பி.முனுசாமி
ஆட்சியரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...