சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரத்தில் கடை அடைப்பு: வெறிச்சோடிய நகரம்

கர்நாடக அரசைக் கண்டித்து நடக்கும் முழு அடைப்பு காரணமாக சிதம்பரத்தின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Updated On :7 டிசம்பர் 2012, 5:52 am

கர்நாடக அரசைக் கண்டித்து நடக்கும் முழு அடைப்பு காரணமாக சிதம்பரத்தின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி டெல்டா கடை மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் தமிழக விவசாயிகள் சங்கம், அனைத்து கட்சிகள் மற்றும் வர்த்தகர் சங்கம் ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை முழுக் கடை அடைப்பை நடத்துகிறது.

இதனால் சிதம்பரம் நகரில் 4 வீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்து அடைக்கப்பட்டிருந்தன. மேலரதவீதியில் உள்ள ஜவுளிக்கடைகள், மளிக்கை கடைகள், நகைக்கடைகள், பெரியமார்க்கெட், சின்னமார்க்கெட், மீ்ன்மார்க்கெட்,  ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் நகரம் வெறிச்சோடி கிடந்தது. அண்ணாமலைநகர் பகுதியில் வர்த்தகர் சங்கத்தினர் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி கடைகளை திறந்து வைத்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.