இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

News image
Updated On :8 டிசம்பர் 2012, 4:54 pm

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த இரு தினங்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 23 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 14 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 6 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 29.2 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 3 மி.மீ மழையும் அம்பாசமுத்திரத்தில் 11.3 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 3 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அணைகளின் நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 68.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2722.64 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 1007.25 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 4.10 அடி உயர்ந்து 73.98 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2.20 அடி உயர்ந்து 67.70 அடியாகவும் இருந்தது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1473 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் பெருங்கால் மதகில் 35 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 0.50 அடி உயர்ந்து 67.00 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 80 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 50 கனஅடி பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.

ராமநதி அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 45 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.