போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மனைவியின் வீட்டில் போய் ரூ.1 லட்சம் மதிப்புகளை சேதப்படுத்திய கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியின் வீட்டில் போய் அத்துமீறி நுழைந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களைச் சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத்

News image
Updated On :9 டிசம்பர் 2012, 5:30 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியின் வீட்டில் போய் அத்துமீறி நுழைந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களைச் சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள, கிருஷ்ணன்கோவில், எழில் நகரைச் சேர்ந்தவர் பா.தேவராஜ் (59). இவரது மகள் ஸ்டெல்லாவை, ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிஷோர்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னையை அடுத்து இருவருக்கிடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தேவராஜும் அவரது மனைவியும் வீட்டில் இருக்கும்போது, கிஷோர்குமார் மற்றும் இருவர் வீட்டினுள் கடப்பாறையுடன் அத்துமீறி நுழைந்து, ஆபாசமாக பேசி, கடப்பாறையைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். மேலும் வீட்டின் கதவு, ஜன்னல், மின் மீட்டர், மின்பெட்டி, டியூப்லைட்கள் முதலியவற்றை உடைத்து சேதப்படுத்தினார்களாம்.இது குறித்து தேவராஜ் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிஷோர்குமார் உள்ளிட்ட மூவரை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.