மாற்றுத் திறனுடையோர் தின விழா
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சிவகாசி ஒன்றியத்தில் மாற்றுத் திறனுடையோர் தின விழா நடைபெற்றது.விழாவிற்கு


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சிவகாசி ஒன்றியத்தில் மாற்றுத் திறனுடையோர் தின விழா நடைபெற்றது.விழாவிற்கு அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் சுடலைமணி தலைமை தாங்கினார். மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.மாற்றுத் திறனுடைய மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் 103 பேர் கலந்து கொண்டனர்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவும், பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயராஜன், சிறப்பு ஆசிரியர்கள் ஸ்டெல்லாராணி, தீனாள், ஜான்ரவி, பிரசன்னகுமார் உள்ளிட்ட ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...