ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பரங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்டோர், பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் ஊராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :12 டிசம்பர் 2012, 5:37 am

மது

ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்டோர், பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் ஊராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் ஊராட்சிமன்றத் தலைவர், கிளர்க் மற்றும் களப் பொறுப்பாளர் ஆகியோர் மீது அப்பகுதி மேற்பார்வை அதிகாரி வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், மத்திய அரசின் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அப்பகுதியில் 180 பேர் பணியாற்றுகின்றனர். பணிக்கு வரும் ஒவ்வொருத்தரிடமும் தினமும் கையெழுத்து வாங்க வேண்டும். ஆனால் தான் ஆய்வு மேற்கொண்ட அன்றைய தினம், 80 பேரிடம்தான் கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். மீதம் 100 பேரிடம் கையெழுத்து வாங்கவில்லை. எனவே, இதில் முறைகேடு நடப்பதாக மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துவிட்டார்.

அதை எதிர்த்தும், வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், 38 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற கிளர்க், களப்பணியாளர்கள் இன்று திருப்பரங்குன்றம் ஊராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.