போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

காவிரி பிரச்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் 3 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு

காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள்

News image
Updated On :13 டிசம்பர் 2012, 6:36 am

கோ.ஜெயக்குமார்

காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் இரு நாள்கள் நீதிமன்ற புறக்கணிப்பும், வழககுரைஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து ஒரு நாளும், ஆக மொத்தம் 3 நாள்கள் வியாழக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிமன்றப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர், வழக்குரைஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர் வழக்குரைஞர் துரைசிங்கம். இவர் கிருஷ்ணன்கோவில் போலீஸ் சரகம், திருமலாபுரத்தில் குடியிருந்து வருகிறார். இவருக்கும் அண்டை வீட்டாருக்கும் உள்ள பிரச்னை தொடர்பான புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குரைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்குரைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாரைக் கண்டித்து வியாழக்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கம் முடிவு செய்தது.

காவிரி பிரச்னையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கம் முடிவு செய்தது.

இதன் பேரில் சுமார் 400 வழக்குரைஞர்கள் தங்களது நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் முடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.