கடையம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே வெள்ளிக்கிழமை சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்து தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டா ர்.


திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே வெள்ளிக்கிழமை சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்து தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டா ர்.
கடையம் அருகே தெற்குமடத்தூர் நாராயணசாமி கோயில் தெருவை சேர்ந்த சங்கரபாண்டி (64). விவசாயி. இவரது மனைவி மல்லிகா (54). இத்தம்பதிக்கு சுந்தராஜன் (33), முத்துராமன் (30), சக்திவேல் (28) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் சுந்தரராஜனுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன.
குடிப் பழக்கம் கொண்ட சுந்தரராஜன் வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்தாராம். இதனால் மனைவி பார்வதி சுந்தரராஜனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சுந்தரராஜன் தந்தையிடம் சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்து வந்தாராம். வெள்ளிக்கிழமை சுந்தரராஜன் சொத்தை பிரித்து கேட்டு மீண்டும் தகராறு செய்தாராம். அப்போது ஆத்திரத்தில் தந்தை சங்கரபாண்டி, தாயார் மல்லிகாவை சுந்தரராஜன் மரக்கட்டையால் தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த சங்கரபாண்டி சம்பவ இடத்திலே இறந்தார். தகவலறிந்த கடையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரராஜனை கைது செய்தனர்.
காயமைடந்த மல்லிகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சங்கரபாண்டி உடலை கைப்பற்றி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...