மேலூர் நீதிமன்றத்தில் கைழுத்திட்டார் துரைதயாநிதி
கிரானைட் முறைகேட்டு வழக்கில் முன் ஜாமின் பெற்ற அழகிரியின் மகன் துரை தயாநிதி மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று காலை கையெழுத்தட்டார்.


கிரானைட் முறைகேட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனையுடன் முன் ஜாமின் பெற்ற அழகிரியின் மகன் துரை தயாநிதி மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட மாஜிஸ்திரேட் ஜெய்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை கீழவளவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
கீழவளவு பொக்கிஷ மலையில் தமிழ்நாடு கனிமவள நிறுவனத்துக்குச் சொந்தமான கிரானைட் குவாரியில் கற்கள் வெட்டி எடுத்துக் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இவர் முன்பு பங்குதாரராக இருந்த ஒபிம்பஸ் கிரைனைட் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அதன்படி கீழவளவு காவல் நிலையத்தில் இன்று காலை 10.30க்கு துரை தயாநிதி கையெழுத்திட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...