நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவிலி.யில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்சலுக்கு சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வைத்திலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்

News image
Updated On :16 டிசம்பர் 2012, 6:19 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்சலுக்கு சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வைத்திலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதமுத்து-அய்யமுத்து தம்பதியினரின் இரண்டாவது மகன் ஹரிஹரன் . இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரு நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அங்கு காய்ச்சல் குறையாத காரணத்தால் டாக்டர், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக ஹரிஹரன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஹரிஹரனுக்கு சனிக்கிழமை மாலை கடுமையான காய்ச்சல் மீண்டும் வரவே மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இதே கிராமத்தைச் சேர்ந்த லியா பிரபா என்ற 6 மாத குழந்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இப் பகுதியில் நிலவும் கடுமையான சுகாதார சீர்கேடும், கழிவு நீர் பாதைகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதுமே, இப் பகுதியில் இது போன்று நோய்களால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக அப் பகுதி மக்கள் கூறினர். மேலும் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தினர் எந்தவித நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.