நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

News image
Updated On :18 டிசம்பர் 2012, 1:09 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் செவ்வாய்க் கிழமை உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ரைட்டன்பட்டி-ஓட்டமடம் தெருவைச் சேர்ந்தவர் அருள்-ஜெனிதா மேரி தம்பதியினரின் மகள் ஜாய்ஸ்லின் (6). இவர் சீனியாபுரத்தில் உள்ள கான்வென்டில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. முதலில் ஜாய்ஸ்லினை ஸ்ரீவில்லிபுத்தூர், நாடகசாலைத் தெருவில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் மருத்துவமனையிலும், பின்னர் வடக்கு ரத வீதியில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் இரு நாட்களும் புற நோயாளியாக சிகிச்சை அளித்துள்ளனர்.

செவ்வாய்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தை ஜாய்ஸ்லினை கொண்டு வந்துள்ளார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் காளிராஜ், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று கூறிவிட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நகர் முழுவதும் ஏராளமானோருக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொது மக்கள் கடும் பீதியில் உள்ளனர். அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இதனால் கூட்டம் அலைமோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.