மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விசாரணைக்கு ஆஜராகுமாறு துரை தயாநிதிக்கு சம்மன்

வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு துரை தயாநிதிக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2012, 8:05 am

தர்மராஜ்

வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு துரை தயாநிதிக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவு பொக்கிஷ மலையில் தமிழ்நாடு கனிம வளத்துக்கு சொந்தமான இடத்தில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை காலை மதுரை ஊரக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு துரை தயாநிதிக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கனிம வள நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் கற்களை அதிக அளவில் வெட்டிக் கடத்தியதாக கீழவளவு போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் முன்னாள் பங்குதாரரான துரை தயாநிதி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குக்காக முன் ஜாமீன் பெற்றுள்ளார் துரை தயாநிதி. அதில், கீழவளவு காவல்நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இன்று காலை கையெழுத்திட வந்த துரை தயாநிதியிடம் மேலூர் காவல்துறை ஆய்வாளர் ஆவுடையப்பன் சம்மனை  அளித்தார். அதை அவர் பெற்றுக் கொண்டார். அதில், வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மதுரை ஊரக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.