விசாரணைக்கு ஆஜராகுமாறு துரை தயாநிதிக்கு சம்மன்
வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு துரை தயாநிதிக்கு சம்மன் அளிக்கப்பட்டது.


வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு துரை தயாநிதிக்கு சம்மன் அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவு பொக்கிஷ மலையில் தமிழ்நாடு கனிம வளத்துக்கு சொந்தமான இடத்தில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை காலை மதுரை ஊரக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு துரை தயாநிதிக்கு சம்மன் அளிக்கப்பட்டது.
ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கனிம வள நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் கற்களை அதிக அளவில் வெட்டிக் கடத்தியதாக கீழவளவு போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் முன்னாள் பங்குதாரரான துரை தயாநிதி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குக்காக முன் ஜாமீன் பெற்றுள்ளார் துரை தயாநிதி. அதில், கீழவளவு காவல்நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இன்று காலை கையெழுத்திட வந்த துரை தயாநிதியிடம் மேலூர் காவல்துறை ஆய்வாளர் ஆவுடையப்பன் சம்மனை அளித்தார். அதை அவர் பெற்றுக் கொண்டார். அதில், வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மதுரை ஊரக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...