மடிக்கணினி கேட்டு திருக்கோவிலூர் பாலிடெக்னிக் மாணவர்கள் போராட்டம்
திருக்கோவிலூர் அருகே அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் அரசின் விலையில்லா மடிக்கணினி கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


திருக்கோவிலூர் அருகே அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் அரசின் விலையில்லா மடிக்கணினி கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருக்கேவிலூர் அடுத்த கொள்ளூர் கிராம எல்லையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி இது வரை வழங்கப்படவில்லை என்று கூறி கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் திருக்கோவிலூர் - விழுப்புரம் பிராதன சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த அரகண்டநல்லூர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணவர்களிடம் சமரசப் பேச்சு நடத்துவதற்கு பதிலாக அவர்களை மிரட்டினார். இதன் காரணமாக மாணவர்களின் போராட்டம் மேலும் வலுவடைந்தது. இதற்கிடையே சப் இன்ஸ்பெக்டர் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்றின் டிரைவரை கீழே இறக்கிவிட்டு, அந்த பேருந்தில் ஏறி பேருந்தை இயக்க முயன்றார். அப்போது, மாணவர்கள் பேருந்தை ஏற்றி எங்களைக் கொன்று விடுவீர்களா என்று கேட்டு அதிக கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளத. மாவட்ட ஆட்சியர் சம்பவ இடதுக்கு வந்து எங்களிடம் பேச வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...