மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிரதமர் உருவ பொம்மை எரிக்க முயன்ற 3 அ.தி.மு.க.வினர் கைது

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிமன்ற கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவமரியாதை செய்யப்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.ராமச்சந்திராபுரம்,

News image
Updated On :31 டிசம்பர் 2012, 1:07 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவிலில் இன்று  பிரதமர் மன்மோகன்சிங்கின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மூன்று அ.தி.மு.க.வினரை போலீஸார் கைது செய்தனர்.

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிமன்ற கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவமரியாதை செய்யப்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.ராமச்சந்திராபுரம், ஜெ.ஜெ.நகர் அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராமராஜ், வன்னியம்பட்டி வழக்குரைஞர் பாலதண்டாயுதம், சுந்தரபாண்டியம் ராமர் ஆகியோர் திங்கள்கிழமை இரவு கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தத்தில் பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். உருவ பொம்மைக்கு தீ வைத்த உடன் போலீஸார் விரைந்து வந்து தீயை அணைத்து, மூவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.