பொன்னேரி, பிப். 11: சோழவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் கெங்காதுரை(40). இவர் கோயம்பேடு மார்கெட்டில் பழவியாபாரம் செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு கெங்காதுரை மனைவியுடன் கோயம்பேடு சென்று இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் வைத்திருந்த 25பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரிய வந்தது. இது குறித்து கெங்காதுரை அளித்த புகாரின் பேரில் சோழவரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.