ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

ஆன்மிக எழுத்தாளர் ரா.கணபதி காலமானார்

சென்னை, பிப்.20: ஆன்மிக எழுத்தாளரும் காஞ்சி மகாபெரியவரின் ’தெய்வத்தின் குரல்’ நூலைத் தொகுத்தவருமான ரா.கணபதி, சென்னையில் திங்கள்கிழமை மாலை 7.30 மணி அளவில் காலமானார். கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:46 am IST

சென்னை, பிப்.20: ஆன்மிக எழுத்தாளரும் காஞ்சி மகாபெரியவரின் ’தெய்வத்தின் குரல்’ நூலைத் தொகுத்தவருமான ரா.கணபதி, சென்னையில் திங்கள்கிழமை மாலை 7.30 மணி அளவில் காலமானார்.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் பெரிதும் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் இல்லத்தில் அமர்ந்த நிலையிலேயே அவருடைய உயிர் பிரிந்தது. தி.நகரில் உள்ள தன் சகோதரியின் வீட்டு மாடியில் அவர் வசித்து வந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

எழுத்துக்காக திருமணமே செய்து கொள்ளாமல் நைஷ்டிக பிரமசாரியாக வாழ்க்கை நடத்தியவர். காஞ்சி சங்கர மடத்தின் பக்தராகத் திகழ்ந்தவர். காஞ்சி மகாபெரியவர் சொல்லச் சொல்ல அவருடைய கருத்துகள் மற்றும் உபந்நியாசங்களைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பில் நூல் எழுதியுள்ளார். இது 7 பாகங்களாக வெளிவந்தது. மேலும், காமகோடி ராமகோடி, காமாக்ஷி கடாக்ஷி உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதி மயிலாபூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்ட "அம்மா-ஸ்ரீ சாரதாதேவியாரின் வாழ்க்கை வரலாறு”, "அறிவுக் கனலே அருட்புனலே - ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு” நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஆன்மிக உலகில் தன் நூல்களால் நீங்கா இடம் பெற்றவர் ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.

தகவலுக்கு: 044 2815 5834

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.