/

திருக்கோவிலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து சாலைமறியல்

திருக்கோவிலூர், ஜன.7: தங்களுக்குத் தரவேண்டிய கூலியைத் தராமல் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் உமா மூர்த்தியைக் கண்டித்து, கூலித் தொழிலாளர்கள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர் அருகே மணம

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:30 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர், ஜன.7: தங்களுக்குத் தரவேண்டிய கூலியைத் தராமல் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் உமா மூர்த்தியைக் கண்டித்து, கூலித் தொழிலாளர்கள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலூர் அருகே மணமுண்டி, குடமுருட்டி கிராமங்களின் ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருப்பவர் உமாமூர்த்தி. இவரிடம், 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்த கூலித் தொழிலாளர்கள் தங்கள் கூலியைக் கேட்டபோது,

தரமுடியாது என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் எனக்கு ஓட்டுப் போடவில்லை என்று கூறி சிலரைத் தாக்கியிருப்பதாக கூலி வேலை செய்தவர்கள் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து அவர்கள் மணமுண்டி கிராமத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், திருக்கோவில் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.