சிவகங்கை, ஜூலை 13 : சிவகங்கையில் 11 வயது மகளுக்கு சீட் கொடுக்க மறுத்த அரசுக் கல்லூரி முதல்வரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(41). இவர் வெள்ளிக்கிழமை மாலை சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கல்லூரிக்கு வந்து அங்கிருந்த கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜெயகாநாதன் அறைக்குச் சென்று தனது 11 வயது மகளுக்கு கல்லூரியில் படிப்பதற்கு சீட் கொடுங்கள் எனக் கூறியுள்ளார். இவரது பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் முத்துக்குமாரை தனது அறையை விட்டு வெளியே செல்லுமாறு ஜெகநாதன் கூறியுள்ளார்.
அங்கிருந்து செல்ல மறுத்த அவர் தனக்கு 2 ஆயிரம் பணம் தருமாறு கேட்டுள்ளார். ஜெகநாதன் பணம் கொடுக்க மறுத்ததால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதல்வர் ஜெகநாதனை இடதுகாலில் 7 இடங்களில் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து உடனடியாக சிவகங்கை நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தப்பியோடிய முத்துக்குமாரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கத்திக்குத்தில் காயமடைந்த ஜெகநாதன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கல்லூரிக்குள் நுழைந்து முதல்வரை கத்தியால் குத்திய சம்பவம் கல்லூரி வளாகத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து முத்துக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

