நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் 1474 தமிழாசிரியர் பணியிடங்கள் பறிப்பு: தமிழாசிரியர்கள் வேதனை

சிதம்பரம், ஜூலை 14: தமிழ்நாட்டில் பள்ளிகளில் உள்ள 1474 தமிழாசிரியர் பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளதால், தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக தமிழாசிரியர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.   தமிழகத்தில் இந்த கல்வ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:22 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், ஜூலை 14: தமிழ்நாட்டில் பள்ளிகளில் உள்ள 1474 தமிழாசிரியர் பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளதால், தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக தமிழாசிரியர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் பள்ளி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் கடந்த ஜூலை 13-ம் தேதி பணிமாறுதல் செய்யப்பட்டனர். இந்த கல்வி ஆண்டின் மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்டு 30-ம் தேதி வரை இருந்தும், மாணவர்கள் எண்ணிக்கை இருத்தும், பாடவேளை வைப்பு முறையை மாற்றி, தற்போது 5153 ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் பந்தாடப்பட்டுள்ளனர்.

இதில் தமிழாசிரியர்கள்-1474 பேர், ஆங்கில ஆசிரியர்கள்-274 பேர், கணித ஆசிரியர்கள்- 1232 பேர், இயற்பியல் ஆசிரியர்கள்- 956 பேர், உயர்அறிவியல் ஆசிரியர்கள்-672 பேர், வரலாறு ஆசிரியர்கள்-498 பேர், புவியியல் ஆசிரியர்கள் -74 பேர். ஆக மொத்தத்தில் 5143 ஆசிரியர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்மாவட்டத்தில் 4455 ஆசிரியர்களும், வெளிமாவட்டத்திற்கு 698 ஆசிரியர்களும் மாறுதலில் பந்தாடப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் ரா.வெங்கடேசன் தெரிவித்தது: வாரத்தில் 5 பாடவேளை கற்பிக்கும் வரலாறு, புவியியல் ஆசிரியர் 2 பேர் உள்ள பள்ளியில் 7 பாடவேளை கற்பிக்கும் தமிழாசிரியர் ஒருவர் மட்டும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 1474 தமிழாசிரியர் பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இணைஇயக்குநர் மற்றும் கல்வித்துறைச் செயலர் ஆகியோரிடம் வேண்டுகோள் வைத்தும் ஏற்க மறுத்துவிட்டனர். இச்சூழலில் குடும்பத்தோடு இடம் மாற வேண்டிய நிலையில் ஆசிரியர்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவில் பணிநிரவல் மூலம் ஆசிரியர்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். குறிப்பாக தாய்மொழியான தமிழ்ப் பாடம் கற்பிக்கின்ற தமிழாசிரியர்களுக்கு தமிழ்ப் பாடம் வைப்புமுறை, முதல் இடம் பெறும் வகையில் வைக்கப்படும். ஆனால் இந்த நிரவலில் அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல், ஆங்கிலம், தமிழ் என்ற வரிசையில் தமிழ் பாடத்தை கடைசியாக வைத்துள்ளனர். என தமிழாசிரியகளுக்கு கல்வித்துறை செய்துள்ள அநீதியை தமிழக முதலவர் கவனத்தில் கொண்டு நீதிவழங்க வேண்டும். இல்லையெனில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ரா.வெங்கேடசன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.