6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐபிஎல்-ஆபாச நடனம்: அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூலை 18: அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழாவின் போது, ஆபாசமாக நடனம் ஆடிய பாப் பாடகி, கிரிக்கெட் வீரர் போலிஞ்சர், அமிதாப் பச்சன், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐசிசி தலைவர்,

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:27 pm

தர்மராஜ்

மதுரை, ஜூலை 18: அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழாவின் போது, ஆபாசமாக நடனம் ஆடிய பாப் பாடகி, கிரிக்கெட் வீரர் போலிஞ்சர், அமிதாப் பச்சன், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐசிசி தலைவர், உறுப்பினர்கள், மைதானப் பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.
ஜெபக்குமார் என்ற மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் துவக்க நிகழ்ச்சிகளின் போது கலாசாரத்துக்கு ஒவ்வாத வகையில் ஆபாசமாக நடனமாடி, பொது இடத்தில் தவறாக நடந்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. 
வழக்கை விசாரித்து வரும் நீதிபதி எஸ்.செல்வம் ஜூலை 18ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார், அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இரு வார காலத்துக்குள் அவர்கள் அனைவரும் பதிலளிக்குமாறு கூறி, அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 31க்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.