/

டிரான்ஸ்பர்மர் பழுது: சரிசெய்யாததால் மக்கள் சாலைமறியல்

திருக்கோவிலூர், ஜூலை 20: திருக்கோவிலூர் அருகே தாடியார் என்ற இடத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டிரான்ஸ்பர்மர் பழுது ஏற்பட்டு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:30 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர், ஜூலை 20: திருக்கோவிலூர் அருகே தாடியார் என்ற இடத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டிரான்ஸ்பர்மர் பழுது ஏற்பட்டு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து  பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறி, இன்று காலை சித்தூர் - தூத்துக்குடி புறவழிச்சாலையில் ஜி.அரியூர் கிராம பேருந்து நிறுத்தத்தின் அருகே 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து, பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.