இறந்தவரை எடுத்துச் செல்வதில் தகராறு: ஒருவர் கொலை
மேலூர், ஜூன் 15: மதுரை மாவட்டம் கொங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அழகர்சாமி(வயது 26) இவர்கள் பகுதியில் வசித்துவந்த பூசார் என்ற நபர் நேற்று மதியம் இறந்துவி


மேலூர், ஜூன் 15: மதுரை மாவட்டம் கொங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அழகர்சாமி(வயது 26) இவர்கள் பகுதியில் வசித்துவந்த பூசார் என்ற நபர் நேற்று மதியம் இறந்துவிட்டார். இவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், பூசாரியின் உடலை எடுத்துச் செல்ல முனைகையில் அந்தப் பாதை தொடர்பாக அழகர்சாமிக்கும் கணேசனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது. இதில் கணேசன் அழகர் சாமியைத் தாக்கினாராம். பதிலுக்கு அழகர்சாமியும் கணேசனைத் தாக்கியுள்ளார். கல்லை எடுத்து தலையில் அடித்துள்ளார் அதில், கணேசன் பலத்த காயமடைந்து இறந்துவிட்டார்.
இதுகுறித்து கணேசனின் மனைவி இந்திரா கீழவளவு போலீஸில் புகார் அளித்தார். இதை அடுத்து போலீஸார் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...