பெருந்துறைக்கு சற்று முன்னர் ரயில் வரும்போது இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்தத் தீ பற்றியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. ரயிலின் சரக்குப் பெட்டியில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதனை கவனித்த நபர் ஒருவர் ரயில் ரயில் கார்டுக்கு தகவல் அளித்துள்ளார். ரயில் கார்டு, உடனடியாக பெருந்துறை ரயில்வே நிலையத்துக்கு தகவல் அளித்தார். ஈரோடு, பெருந்துறை, பவானி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெட்டி முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்தில் பயணிகள் பெட்டிகள் உடனடியாக கழற்றிவிடப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை .