தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை பாசனத்துக்காக திறப்பு

கோபிசெட்டிபாளையம், மார்ச் 4: கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீர் திறந்துவிடப்பட்டது. கோபிசெட்டிபாளையம் தாலுகா கொங்கர்பாளையம் அருகே 42 அடி உயரத்தில் ந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:33 am

ஜபலின் ஜான்

கோபிசெட்டிபாளையம், மார்ச் 4: கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீர் திறந்துவிடப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் தாலுகா கொங்கர்பாளையம் அருகே 42 அடி உயரத்தில் நீர் தேக்கிவைக்கும் அளவில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணைக்கு குன்றி, விலாங்கோம்பை, இஞ்சிக்கிடங்கு, மல்லியதுருவம், கெம்பனூர் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணையின் வலதுபக்க கால்வாய் மூலம் 1,600 ஏக்கர் விவசாய நிலங்களும், இடதுபக்க கால்வாய் மூலம் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

மஞ்சள் மற்றும் வெங்காயம் நடவு செய்வதற்காக குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

இதன்படி தமிழக அரசு, இந்த அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அணை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.